வாழ்க்கைக்கு ஒளியேற்றும் விளக்கு - கீதை !
Dinamani Tamil Daily
By மதுரை,
Published : 21 September 2015 03:52 AM IS
Published : 21 September 2015 03:52 AM IS
வாழ்க்கைக்கு ஒளியேற்றும் விளக்காக பகவத் கீதை திகழ்கிறது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
சின்மயா மிஷன் சார்பில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பகவத்கீதை ஒப்புவித்தல் போட்டியைத் தொடங்கி வைத்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:
பகவத்கீதை கூறும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்றைய சூழலில் கீதையின் வழி நடப்பதை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். வாழ்க்கைக்கு ஒளியேற்றும் கீதையின் முக்கியத்துவத்தை பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உணர்த்துவது அவசியம். இதன் மூலம் அவர்களை எதிர்காலத்தில் நல்ல குடிமக்களாக உருவாக்க முடியும் என்றார்.
சுவாமி சிவயோகானந்தா: கீதை ஒப்புவித்தல் போட்டியில் அனைத்து மதம் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றிருப்பது சிறப்பு அம்சம். வடமொழி என்றில்லாமல் வாழ்க்கைக்கான தத்துவம் என்பதை முக்கியமாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் 35 பள்ளிகளைச் சேர்ந்த 12,500 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 600 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகினர். எல்.கே.ஜி. முதல் 9 ஆம் வகுப்பு வரை 5 பிரிவுகளாகப் போட்டி நடத்தப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகிறது என்றார்.
வடமலையான் மருத்துவமனை தலைவர் டாக்டர் புகழகிரி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளர் கே.சந்தோஷ், சின்மயா மிஷன் தலைவர் எம்.எஸ்.மீனாட்சிசுந்தரம், விசுவ ஹிந்து பரிஷத் சின்மயா சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில், சின்மயா சேவா டிரஸ்ட் அறங்காவலர் சி.துரைப்பாண்டியன், ரேவிஷ் குழும இயக்குநர் என்.ஸ்ரீனிவாசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
Gita chanting contest held -
THE HINDU
About 600 students from 32 schools in the city participated in the 17th city-level and second International Chinmaya Gita Chanting Competition here on Sunday.
As many as 11,830 students from the class I to IX took part in the qualifying rounds of the competition where they were required to recite verses from Chapter 15 of Bhagavad Gita. The competition, which was organised with the support of Central Bank of India, was inaugurated by Minister for Cooperation ‘Sellur’ K. Raju. Pugalagiri Vadamalayan, Chairman and Managing Director, Vadamalayan Hospitals, K. Santosh, Regional Manager, Central Bank of India, and M.S. Meenakshi Sundaram, president, Chinmaya Mission, Madurai, addressed the gathering.
“Chapter 15 of Bhagavad Gita lays emphasis on the virtues of basic values — from conquering greed and giving up pride to focussing on goals and achieving them. Reading it will be a learning experience for the children,” said Swami Sivayogananda, Acharya of Chinmaya Mission in Madurai.
A quiz contest was conducted for parents who accompanied the children.
“After a gap of more than 10 years, the international competition for schoolchildren is being conducted in the city. The competitions are being held simultaneously in Chinmaya mission centres across the globe. Finalists from abroad will come to India for the international finals,” Swami Sivayogananda said.
"Daily Thanthi" Tamil Daily..
"Daily Thanthi" Tamil Daily..
மதுரை சின்மயாமிஷன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கீதை ஒப்புவித்தல் போட்டியின் இறுதி சுற்று சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார். வடமலையான் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் புகழகிரி சிறப்புரையாற்றினார். சென்ட்ரல் வங்கி மேலாளர் சந்தோஷ் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக சின்மயா மிஷன் தலைவர் மீனாட்சி சுந்தரம் அனைவரையும் வரவேற்றார். போட்டியில் எல்.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சின்மயா மிஷன் துரைபாண்டியன் தலைமை தாங்கினார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ரேவிஷ் குழும இயக்குனர் ஸ்ரீனிவாசன் பரிசுகளை வழங்கினார். ஏற்பாடுகளை திலகர், கோபால்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment